ADDED : பிப் 19, 2024 04:56 AM
வீட்டில் நகை திருட்டு
திருமங்கலம்: சிந்துபட்டி அருகே பொறுப்பு மேட்டுப்பட்டி சேர்ந்த பழனியம்மாள் 54, கணவர் இறந்துவிட்ட நிலையில் தனியாக வசிக்கிறார். நேற்று முன்தினம் மதியம் வீட்டிற்கு அருகில் உள்ள மிளகாய் தோட்டத்தில் களை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டிலிருந்து பேன்ட், சட்டை அணிந்த நபர் ஒருவர் வெளியே சென்றதை பார்த்தார். சந்தேகத்தில் வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 3.5 பவுன் நகைகள், பணம் ரூ. 10 ஆயிரம் திருடப்பட்டது தெரிந்தது. சிந்துபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
பேரையூரில் திருட்டு
பேரையூர்: அனுப்பட்டி சக்திவேல் 48. கட்டட தொழிலாளி. இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு சாவியை வீட்டின் முன்பிருந்த பாத்ரூமில் வைத்து விட்டு வேலைக்கு சென்றார். மர்ம நபர்கள் அந்தச் சாவியை எடுத்து வீட்டைத் திறந்து பீரோவை உடைத்து அதிலிருந்து அலைபேசி, 3.5 பவுன் நகையை திருடிச் சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
விவசாயி வீட்டில் பணம் திருட்டு
பேரையூர்: தாலுகா அத்திபட்டி கிழக்குத்தெருவைச் சேர்ந்தவர் புஷ்பம் 45. விவசாயி. இவர் தோட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்தார். அறுவடை செய்து வியாபாரிக்கு விற்ற ரூ.21 ஆயிரத்தை வீட்டில் வைத்துவிட்டு விவசாய வேலைக்காக வெளியே சென்று விட்டார். திரும்ப வந்து பார்த்தபோது யாரோ சிலர் வீட்டுக் கதவைத் திறந்து பணத்தை திருடியது தெரியவந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.
மின்மோட்டார் திருட்டு
பேரையூர்: எஸ்.கீழப்பட்டிடையச் சேர்ந்தவர் செல்லையா. இவர் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றார். நேற்று வீடு திரும்பிய போது கதவுகள் உடைக்கப்பட்டு 5 எச்.பி., மின் மோட்டார் மற்றும் பீரோ உடைக்கப்பட்டு ரூ.46 ஆயிரம், கார் ஆர்.சி ., புத்தகத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
