ADDED : ஏப் 09, 2025 05:10 AM
வேன் மோதி முதியவர் பலி
திருமங்கலம்: சாத்தங்குடி நேரு 70. இவர் டூவீலரில் சென்று வெள்ளை பூண்டு விற்பனை செய்து வந்தார். நேற்று மதியம் திருமங்கலம் மார்க்கெட்டில் பூண்டு வாங்கிக்கொண்டு விற்பனைக்காக டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சாத்தங்குடிக்கு சென்றார். உசிலம்பட்டியில் இருந்து திருமங்கலத்திற்கு காஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு வந்த மினி வேன், நேரு ஓட்டி வந்த டூவீலர் மீது மோதியது. இதில் நேரு பலியானார். தேனி மாவட்டம் போடிநாயக்கனுார் மினி வேன் டிரைவர் அன்பழகனிடம் 35, போலீசார் விசாரிக்கின்றனர்.
கத்தியுடன் வாலிபர் கைது
பேரையூர்: சாலிசந்தை அருண்பாண்டியன் 21. இவர் பேரையூர் பஜார் பகுதியில் கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தார். ரோந்து சென்ற போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தீயில் கருகிய ஆட்டோ
பேரையூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் மதனராஜ் 28. ஈரோட்டில் இருந்து ஸ்ரீவில்லிபுத்துார் செல்ல லோடு ஆட்டோவில் பேரையூரை அடுத்த பாப்பையாபுரம் அருகே சென்று கொண்டிருந்தார். திடீரென லோடு ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
