
பஸ்சிற்கு பயம் காட்டிய இளைஞர்
உசிலம்பட்டி: மதுரை - தேனி அரசு பஸ்சை 60 பேருடன் நேற்று காலை 8:30 மணிக்கு டிரைவர் ஆறுமுகம் ஓட்டி வந்தார். பொட்டுலுப்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கட்டக்கருப்பன்பட்டி விலக்கில் இருந்து ரோட்டின் குறுக்கே பூதிப்புரம் செந்தமிழ்ச்செல்வன் 19, என்பவர் டூவீலரை ஓட்டி வந்து பஸ்சுக்கு முன்பாக உசிலம்பட்டி ரோட்டில் திருப்ப முயன்றார். இதில் நிலைத் தடுமாறிய டிரைவர் பஸ்சை திருப்ப முயன்ற போது டூவீலரில் மோதியதுடன் ரோட்டோர வேப்பமரத்தில் மோதி நின்றது. செந்தமிழ்ச்செல்வன் காயமடைந்தார். பயணிகள் சிலரும் காயமுற்றனர். உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
* மண் அள்ளியவர் கைது
மேலுார் : உறங்கான்பட்டி வி.ஏ.ஓ., பார்த்திபன். வெள்ளலூர் மாயாண்டி கண்மாய் பகுதியில் ரோந்து சென்றபோது மேல உரப்பனுார் லாரி டிரைவர் சுந்தரராஜ் 32, கிராவல் மண் அள்ளவே போலீசில் ஒப்படைத்தார். சுந்தரராஜை கீழவளவு எஸ். ஐ., அசோக்குமார் கைது செய்தார்.
* சதுரகிரியில் பக்தர் மரணம்
பேரையூர்: பேரையூர் தாலுகா சதுரகிரி மலை அடிவாரம் தாணாப்பாறை மலையடிவாரப் பகுதியில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை கோவிந்தராஜ் 58, இறந்து கிடந்தார். காரணம் குறித்து சாப்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
* '8'க்கு தொல்லை கொடுத்த '16'
சமயநல்லுார்: ஒரு கிராமத்தை சேர்ந்த 4ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது அப்பகுதி எலக்ட்ரிக் வேலை செய்யும் 16 வயது சிறுவன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு வந்த சிறுமியின் தந்தையை பார்த்து சிறுவன் தப்பினார். அவரை சமயநல்லுார் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
* கடையில் திருட்டு ----------- (படம் உண்டு)
கொட்டாம்பட்டி : கச்சிராயன்பட்டி மதுரை வீரன் 37, நான்கு வழிச்சாலையில் காபி கடை நடத்துகிறார். நேற்று முன்தினம் இரவு முன்பக்கம் தார்பாயை கொண்டு கடையை மூடிவிட்டு ஊழியர்கள் துாங்கினர். நள்ளிரவில் முகத்தை துணியால் மூடியபடி கடைக்குள் புகுந்த நபர் பணப்பட்டியில் இருந்த ரூ. 23 ஆயிரம், சிகரெட் பெட்டிகள், அலைபேசியை திருடிச் சென்றார். போலீசார் விசாரிக்கின்றனர்.