
மாடுகள் திருட்டு: மூவர் கைது மதுரை: ஆழ்வார்புரம் செல்வகுமார் 45. அப்பகுதி வைகை கரையோரம் மாடுகளை மேயவிட்டு திருப்பி கொட்டகையில் அடைத்தபோது 3 மாடுகள் திருடப்பட்டிருந்தது தெரிந்தது. இதுதொடர்பாக முனிச்சாலை சதீஷ் 31, விக்னேஷ் 28, முகமது அசாருதீன் 26, ஆகியோரை மதிச்சியம் போலீசார் கைது செய்தனர்.
விவசாயி பலி மேலுார்: உச்சரிச்சான்பட்டி வல்லப்பன் 75, விவசாயி. நேற்று காலை கோட்ட நத்தாம்பட்டியில் உள்ள வங்கிக்கு டூவீலரில் சென்றார். ரோட்டின் மறுபுறத்தில் இருந்த வங்கிக்கு செல்வதற்காக டூவீலரை திரும்பியபோது பின்னால் வந்த டூவீலர் மோதியதில் இறந்தார். இன்ஸ்பெக்டர் சிவசக்தி விசாரிக்கிறார்.
வாட்ச்மேனிடம் வழிப்பறி வாடிப்பட்டி: மேட்டு நீரேத்தான் செல்வம் 61. ஆண்டிபட்டி பங்களா ரோட்டில் உள்ள பர்னிச்சர் கடையில் வாட்ச்மேன் வேலை பார்க்கிறார். நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு முகத்தில் துணி கட்டி இரு டூவீலரில் வந்த 4 பேர் செல்வத்தை எழுப்பி பேச்சு கொடுத்துள்ளனர். பின் ஆயுதங்களை காட்டி மிரட்டி சம்பள பணம் ரூ.7,150ஐ பறித்து தப்பினர். போலீசார் விசாரிக்கின்றனர்.
கார் - ஆட்டோ மோதல்: பெண் பலி உசிலம்பட்டி: அம்பட்டையன்பட்டி வீரம்மாள் 42. வீட்டில் தவறி விழுந்ததில் காயமடைந்தார். அவரை உசிலம்பட்டி மருத்துவமனைக்கு உறவினர்கள் இலக்கியா 32, நிவேதா 28, அபிராமி 30, ரமேஷ் 46 ஆகியோர் ஆட்டோவில் அழைத்து வந்தனர். பிரியா கண்ணன் 32, ஓட்டி வந்தார்.
நேற்று காலை 7:40 மணியளவில் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லுாரி முன்பு வந்தபோது கம்பத்திலிருந்து யோகேஸ்வரன் 28, என்பவர் மதுரை நோக்கி ஓட்டி வந்த கார் மோதியது. இதில் வீரம்மாள் இறந்தார். ஆட்டோ உருக்குலைந்தது. 5 பேர் காயமுற்றனர். உசிலம்பட்டி நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.