
முன்விரோதத்தில் ஒருவர் கொலை
திருநகர்: மதுரை விளாச்சேரி மொட்டைமலை பகுதியை சேர்ந்தவர் பரமன் 40. பக்கத்து வீட்டில் வசிக்கும் இவரது உறவினர் கரன் 27. இருவருக்கும் ஏற்கனவே சொத்து பிரச்னை இருந்து வந்தது. பரமன் வளர்த்து வந்த மாடுகளின் கழிவுகள் கரன் வீட்டு முன்பு ஓடியதாகவும், கொசுக்கள் தொல்லை இருப்பதாகவும் கூறி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் கரன் அரிவாளால் வெட்டியதில் பரமன் சம்பவ இடத்திலேயே இறந்தார். பரமனின் மனைவி சுபா திருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் கரன், சிவபிரசாத் ஆகியோரை தேடி வருகின்றனர்.
விபத்தில் மூதாட்டி பலி
மேலுார்: தெற்கு தெரு பாண்டியம்மாள் 59, நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு எஸ். கல்லம்பட்டியில் உறவினரை பார்த்துவிட்டு சொந்த ஊருக்கு நடந்து சென்றார். முனி கோயில் அருகே நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றார். அதேநேரம் திருச்சி நோக்கி சென்ற கார் மோதியதில் இறந்தார். மேலுார் எஸ்.ஐ., முஹம்மது சலீல் சல்மான், போலீசார் தினேஷ் குமார் விசாரிக்கின்றனர்.
ஒருவர் கைது
மேலுார்: கீழவளவு வெள்ளையதேவனுக்கும், அதை ஊரை சேர்ந்த நவீனுக்கும் தொழில் போட்டி காரணமாக முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் ஆக. 26 இரவு வெள்ளையத்தேவனை வெட்டிய வழக்கில் கீழவளவு போலீசார் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று கீழவளவு கோபியை 25, கைது செய்தனர்.
வாலிபர் தற்கொலை
திருமங்கலம்: தெற்கு தெருவை சேர்ந்த ஹரிஷ் 23, கேட்டரிங் முடித்துள்ளார். காதல் தோல்வி காரணமாக விரக்தியில் இருந்தார். நேற்று மாலை ஆறுகண் பாலம் அருகே திருமங்கலத்தில் இருந்து விருதுநகர் சென்ற தண்டவாள பராமரிப்பு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். விருதுநகர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.