தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்


ADDED : ஆக 31, 2025 04:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2025 04:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குழந்தை பலி மேலுார்: நத்தம் பூபதி. இவரது ஐந்து மாத மகள் கனிஷ்கா. மற்றும் மனைவியுடன் பட்டூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். நேற்று பனை மரத்தடியில் குழந்தையை படுக்க வைத்துவிட்டு ஆட்டை கட்டுவதற்காக சென்றார். அப்போது பனம்பழம் தலையில் விழுந்ததில் குழந்தை இறந்தது. மேலவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.

கண்மாயில் மூழ்கி ------------------- மாணவர் பலி திருப்பரங்குன்றம்: மதுரை பசுமலை நவீன் 16, இவர் அப்பகுதி பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார். நவீன் நேற்று பள்ளிக்கூடம் முடிந்து நண்பர்களுடன் மாடக்குளம் கண்மாய்க்கு குளிக்கச் சென்றார். கண்மாயில் குளித்துக் கொண்டிருந்தபோது தண்ணீரில் நீரில் மூழ்கி இறந்தார். திருப்பரங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.

-----கார் மோதி முதியவர் பலி திருமங்கலம்: மதுரை பூஞ்சுத்தியைச் சேர்ந்த சேசுராஜ் 75, இவர் கள்ளிக்குடி அருகே அகத்தாப்பட்டியில் உள்ள மகள் வீட்டில் வசித்தார். நேற்று முன்தினம் கள்ளிக்குடி ஓட்டலில் உணவு சாப்பிட்டபின், அவ்வூரில் நான்கு வழி சாலையை கடக்க முயன்றார். அந்த வழியாக சென்ற கார் மோதி காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us