ADDED : செப் 02, 2025 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண் தற்கொலை
உசிலம்பட்டி: மேலப்புதுார் முஸ்லீம் தெருவில் குடியிருப்பவர் மேடை அலங்கார தொழிலாளி முத்துப்பாண்டி 26. இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு நர்சிங் பயிற்சி பெற்ற கற்பகம் 20, என்பவரைக் காதலித்து திருமணம் செய்தார். ஒரு வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கற்பகம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காரணம் குறித்து உசிலம்பட்டி உதவி கலெக்டர் உட்கர்ஷ்குமார் விசாரிக்கிறார்.
இன்ஸ்பெக்டர்கள் பதவியேற்பு
உசிலம்பட்டி: தாலுகா, விக்கிரமங்கலம் போலீஸ் ஸ்டேஷன்கள் தரம் உயர்த்தப் பட்டு புதிய இன்ஸ்பெக்டர்கள் பதவியேற்றனர். தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் வனிதா, விக்கிரமங்கலம் ஸ்டேஷனில் பூமா ஆகியோர் புதிய முதல் இன்ஸ்பெக்டர்களாக பதவிஏற்றனர்.