ADDED : நவ 03, 2025 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மது விற்ற இருவர் கைது பேரையூர்: பெருங்காமநல்லுார் பிச்சைமணி 49. இவரது வீட்டின் பின்புறம் அனுமதியின்றி மது விற்றுக் கொண்டிருந்தார். அதேபோல் காளப்பன்பட்டி சுஷ்மிதா 27. இவரும் அதே ஊரில் மது விற்றுக் கொண்டிருந்தார். ரோந்து சென்ற சேடப்பட்டி எஸ்.ஐ., சபிதாபானு இருவரையும் கைது செய்து 59 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார்.
போக்சோவில் கைது மதுரை: பேரையூர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன், 28. இவர், மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவியை காதலிப்பதாக கூறி அவரைத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் தமிழரசனை கைது செய்தனர்.

