சாராய ஊறல்: ஒருவர் கைது பேரையூர்: எஸ்.மேலப்பட்டி செல்வம் 46, பாண்டி. சந்தையூர் சங்கர் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்கின்றனர். இங்கு பிளாஸ்டிக் டிரம்மில் 150 லிட்டர் சாராயத்தை ஊறல் போட்டு இருந்தனர். ரோந்து சென்ற இன்ஸ்பெக்டர் மருதலட்சுமி, எஸ்.ஐ சந்தோஷ்குமார் தலைமையிலான போலீசார் செல்வத்தை கைது செய்து 150 லிட்டர் சாராயத்தை கைப்பற்றினர். பாண்டியை தேடி வருகின்றனர்.
மாடு முட்டி ஒருவர் பலி பேரையூர்: மேலகாடனேரி ராஜா 63. இவர் அப்பகுதியில் நடந்துச்சென்றபோது அய்யாவு என்பவரின் பசுமாடு முட்டியதில் கீழே விழுந்து ராஜா இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
வைகையில் உடல் மீட்பு வாடிப்பட்டி: பரவை சத்தியமூர்த்தி நகர் ராஜா மகன் சந்தோஷ் 18. லாரி கம்பெனி லோடுமேன். நேற்று முன்தினம் மதியம் பவர் ஹவுஸ் பகுதி வைகை ஆற்றில் குளித்தபோது மூழ்கினார். தீயணைப்பு அலுவலர்கள் முத்துக்குமரன், நாகராஜ் தலைமையில் வீரர்கள் தேடினர். துவரிமான் அருகே சந்தோஷ் உடல் மீட்கப்பட்டது.
250 மதுபாட்டில் பறிமுதல்: இருவர் கைது வாடிப்பட்டி: சமயநல்லுார் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையில் எஸ்.ஐ., முகமது ரபிக் போலீசார் சுந்தரபாண்டி, கார்த்திக், வயக்காட்டுசாமி குற்றத் தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டனர். பஸ் ஸ்டாப் அருகே சாக்கு மூடையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கடத்தி வந்த 250 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். கடத்திய சோழவந்தான் அடுத்த கீழமட்டையான் அரவிந்த் 29, விஜயகுமாரை 39, கைது செய்தனர்.

