நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொத்தனார் பலி
சோழவந்தான்: விக்கிரமங்கலம் தெய்வம் 47, கொத்தனாரான இவர், பணி முடிந்ததும் போதையில் விக்கிரமங்கலம் பஸ் ஸ்டாண்டிலேயே படுத்து விட்டார். நேற்று அதிகாலை வாகனம் ஒன்று தலையில் ஏறியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
முகமூடி கொள்ளையர் வழிப்பறி
கள்ளிக்குடி: உலகாணி கிராமத்தைச் சேர்ந்தவர் திருமுருகன் 26. தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு வேலைக்காக டூவீலரில் சென்றபோது கூடக்கோவில் கண்மாய் பகுதியில் முகவரி கேட்பது போல் முகத்தை கர்சீப்பால் மூடியபடி இருந்த 3 பேர் டூவீலரை நிறுத்தி பணம், அலைபேசியை கேட்டனர். அவரிடம் இல்லாததால் டூவீலரை வழிப்பறி செய்தனர். கூடக்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

