ஆசிரியை மீது ஆசிரியர் தாக்குதல்
மதுரை: மாடக்குளத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் 36. இவரது மனைவி ஜஸ்டின் ஸ்டெல்லா மேரி. காதல் திருமணம் செய்தவர்கள். வெவ்வேறு தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக உள்ளனர். ராமகிருஷ்ணன் சக ஆசிரியை ஒருவருடன் தொடர்பில் இருந்ததை அறிந்து மேரி கேட்டபோது, '3 பேரும் சேர்ந்து வாழ்வோம்' என்றார். இதை ஏற்க மறுத்தவரை ராமகிருஷ்ணன் கடுமையாக தாக்கினார். எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.
கடனால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
திருமங்கலம்: கீழக்கோட்டையை சேர்ந்தவர் ஜெயபாண்டி 33. திருமங்கலம் காமராஜர்புரம் தனியார் மருந்து கடை ஊழியர். நேற்று காலை வேலைக்கு புறப்பட்டவர் கூழையாபுரம் பகுதியில் தண்டவாளம் அருகே நீண்ட நேரம் நின்றிருந்தார். காலை 10:30 மணிக்கு நாகர்கோவில் - மும்பை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ரூ.50 ஆயிரம் கடனை அடைக்க முடியாததால் தற்கொலை செய்துகொள்வதாக மருந்து கடை வாட்ஸ் ஆப் குரூப்பில் பதிவிட்டு, தான் இருக்கும் இடம் குறித்து லொகேஷன் ஷேர் செய்திருந்தார்.

