ADDED : டிச 18, 2025 06:43 AM
போலி பெண் ஊழியர் கைது மதுரை: தெற்குமாசிவீதி மறவர்சாவடி தெரு மக்களிடம், மின்வாரிய அலுவலகத்தில் இருந்து வருவதாக கூறிய ஒரு பெண், மின் வாரிய எண்கள் குறித்த 'ஸ்டிக்கர்'களை காண்பித்து வீடுகளில் ஒட்ட வேண்டும் என கூறி, அதற்காக ரூ. 50 கட்டணம் செலுத்த வேண்டும் என கேட்டுள்ளார். இதை நம்பிய பெண்கள் பலர் அவரிடம் பணம் கொடுத்தனர்.
அப்போது விக்னேஷ்வரன் என்பவர் சந்தேகப்பட்டு விசாரித்தார். அப்பெண் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். மின்வாரிய அலுலகத்தை தொடர்பு கொண்டு விசாரித்ததில் அப்பெண் போலி அலுவலர் எனத் தெரிந்தது. தெற்குவாசல் போலீசில் அவரை ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் வாடிப்பட்டி கச்சகட்டியைச் சேர்ந்த சங்கீதா 42, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் 54 ஸ்டிக்கர்களை பறிமுதல் செய்தனர்.
குழந்தை பலி மதுரை: சோலையழகுபுரம் ராமநாதன் 24. இவரது மனைவி சுஜித்ரா. இவர்களின் 7 மாதக் குழந்தை கேஷிகா ஸ்ரீ. உடல் நலக்குறைவு காரணமாக அப்பகுதி தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி இறந்தது. ஜெய்ஹிந்த் புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

