ADDED : ஜன 21, 2026 06:13 AM

அ.தி.மு.க., நிர்வாகி கொலையில் ஒருவர் கைது
திருமங்கலம்: கூத்தியார்குண்டு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மைக் செட் உரிமையாளர் பிச்சை ராஜா 44, இவர் அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட மீனவர் அணி இணைச் செயலாளராக இருந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு மைக் செட் உரிமையாளர் பாலமுருகனுக்கும் 32, தொழில் போட்டி இருந்தது. பொங்கல் பண்டிகையின் போது கிராமத்தில் நடந்த விழாவில் பிச்சை ராஜா மைக் செட் அமைத்துள்ளார்.
இது தொடர்பாக பிச்சை ராஜாவிற்கும், பாலமுருகனுக்கும் தகராறு ஏற்பட்டது. பாலமுருகன் கத்தியால் குத்தியதில் பிச்சை ராஜா பலியானார். பாலமுருகன் தலைமறைவானார். ஆஸ்டின்பட்டி போலீசார் கூத்தியார்குண்டு நண்பர் வீட்டில் பதுங்கி இருந்த பாலமுருகனை நேற்று கைது செய்தனர்.
டீ மாஸ்டர் பலி
மேலுார் : சாம்பிராணி பட்டி மூக்கன் 70, கிடாரிப்பட்டியில் டீ மாஸ்டராக பணியாற்றினார். .நேற்று முன்தினம் மதிய உணவுக்காக வீட்டுக்கு டூவீலரில் சென்றார். அழகாபுரி அருகே எதிரே வந்த சரக்குவேன் மோதி இறந்தார். எஸ்.ஐ., சோனைமுத்து விசாரிக்கிறார்.
ஒருவர் பலி
மேலுார் : பனங்காடியைச் சேர்ந்தவர் மணிகண்டன் 21. பழநி செங்கல் சூளையில் வேலை பார்த்தார். பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்தவர், நேற்று முன் தினம் இரவு டூவீலரில் வேலைக்கு சென்றார். சுக்காம்பட்டி கேட்கடை அருகே வேகத்தடையில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் இறந்தார். மேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
