ADDED : ஜன 23, 2026 06:34 AM

கஞ்சாவுடன் ஒருவர் கைது சோழவந்தான்: வாடிப்பட்டி ரோட்டில் சோழவந்தான் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சிக்கந்தர் சாவடி முருகன் 41, பசும்பொன்நகர் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்தார். அவரிடம் விசாரித்ததில் ஒரு கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. அவரை கைது செய்தனர்.
புகையிலை கடத்தியோர் கைது பேரையூர்: டி. கல்லுப்பட்டி எஸ்.ஐ., கவிதா தலைமை யில் போலீசார் மதுரை - -- ராஜபாளையம் ரோடு கள்ளிக்குடி பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடு பட்டிருந்தனர். மதுரையில் இருந்து ராஜ பாளையம் சென்ற ஒரு காரை சோதனை செய்த தில் 66 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது. அதை பறி முதல் செய்த போலீசார், அதனை கடத்தி வந்த ராஜபாளையம் தாலுகா ஆவாரம்பட்டி ஆறுமுகம் 28, பேரையூர் தாலுகா வையூர் சரவணகுமாரை 61 கைது செய்து அவர்கள் வைத்திருந்த ரூ.41200ஐ பறிமுதல் செய்தனர்.
