
கொத்தனார் பலி கொட்டாம்பட்டி: புதுக்கோட்டை மாவட்டம் பாலக்குறிச்சி பழனிச்சாமி 47, கொத்தனார். நேற்று முன்தினம் மாலை பள்ளபட்டியில் உறவினர் திருமணத்தில் கலந்து கொண்டார். டூவீலரில் சொந்த ஊருக்கு செல்ல வெள்ளமலைபட்டி 4 வழிச்சாலையில் திரும்பினார். அப்போது திருச்சியில் இருந்து மதுரைக்கு சென்ற கார் மோதி இறந்தார். கொட்டாம்பட்டி எஸ்.ஐ., தாமரைக் கண்ணன் விசாரிக்கிறார்.
ரூ.6 லட்சம் பறிப்பு: இருவர் கைது மதுரை: கூடல்நகர் சங்கீத் நகர் கார்த்திக் 43. மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள நகை அடகு,விற்பனை நிறுவன ஊழியர். ஜன.23ல் ராமநாதபுரத்தை சேர்ந்த அஸ்வின், தனது சித்தப்பா செல்லுார் மீனாட்சிபுரம் லட்சுமணன் நகைகள் ஒரு அடகு கடையில் இருப்பதாகவும், அதை மீட்க ரூ.6 லட்சம் தேவை என்றும் கேட்டுள்ளார். இதை நம்பி வந்த கார்த்திக்கிடம் பணத்தை பெற்றுக்கொண்டு நகையை தராமல் தப்பினர். இருவரையும் தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.
தடை புகையிலை: வியாபாரி கைது எழுமலை : உலைப்பட்டி கடை ஒன்றில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் எஸ்.ஐ., ராஜா தலைமையில் போலீசார் சோதனையிட்டனர். தங்கப்பாண்டி 40, பெட்டிக்கடையில் 22 கிலோ தடை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அவரையும் கைது செய்தனர்.

