ADDED : பிப் 15, 2026 06:18 AM
அ நிறம் | அளவு
கடனால் தற்கொலை
மதுரை: அவனியாபுரம் ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் அருண்குமார் 32. மருந்து விற்பனை பிரதிநிதி. மனைவி, 6 வயதில் மகன், ஒன்றரை வயதில் மகள் உள்ளனர். இரண்டு ஆண்டுகளாக வெளிநாட்டு கரன்சிகளை வாங்கியதில் நஷ்டம் ஏற்பட்டு கடனாளியான அருண்குமார், விரக்தியில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவனியாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
விவசாயி பலி
மேலுார்: து.செட்டியார்பட்டி கருப்பையா 30, விவசாயி. நேற்று முன்தினம் மாலை டூவீலரில் மேலுாரில் இருந்து செட்டியார்பட்டிக்கு சென்றார். திருப்புத்துார் பாலம் அருகே நான்கு வழிச்சாலையில் சென்றபோது டூவீலர் நிலைத் தடுமாறி ரோட்டோர தடுப்பு கம்பியில் மோதியதில் இறந்தார். எஸ்.ஐ., ஜெயக்குமார் விசாரிக்கிறார்.
