ADDED : மார் 05, 2026 04:50 AM
அ நிறம் | அளவு
கத்தி குத்து
கொட்டாம்பட்டி: குன்னாரம்பட்டியில் மார்ச் 2 ல் கோயில் திருவிழா நடந்தது. இதில் கலந்து கொள்ள பாலமுருகன் வீட்டுக்கு வந்த கருங்காலக்குடி தென்னிலவன் மற்றும் 10 பேர் மது போதையில் அதே ஊரைச் சேர்ந்த பரணியிடம் வம்பிழுத்தனர்.
இதை உறவினர் ஆறுமுகம் மற்றும் பாண்டி முருகன் தட்டிக் கேட்டனர். அதில் ஆத்திரமடைந்தவர்கள் இருவரிடமும் தகராறு செய்து பாண்டி முருகனை கத்தியால் குத்தினர். காயமடைந்த அவர், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் லோகநாதன் விசாரிக்கிறார்.--
