ADDED : மார் 08, 2026 05:36 AM

இளைஞர் பலி மேலுார்: சூவான்சான்பட்டி பிரதாப் 20. நேற்று முன் தினம் இரவு 11:00 மணியளவில் நண்பர் மகேந்திரனை 20, டூவீலரில் அழைத்துச் சென்றார். திருவாதவூர் கண்மாய் வளைவில் நிலை தடுமாறி ரோட்டோரத்தில் இருந்த தடுப்பு கம்பியில் மோதி இறந்தார். மகேந்திரன் காயமுற்றார். எஸ்.ஐ., ராஜேந்திரன் விசாரிக்கிறார்.
கார் உரிமையாளர் பலி கொட்டாம்பட்டி: மதுரை மேல பொன்னகரம் விமலன் 52. சொந்தமாக கார் ஓட்டி வந்தார். திருமணம் ஆகாதவர். மார்ச் 5 சென்னைக்கு சென்றுவிட்டு மதுரை திரும்பினார். நேற்று முன் தினம் இரவு அய்யாபட்டி பாலம் அருகே காரில் ஓய்வெடுத்தார். நேற்று காலை காரில் உட்கார்ந்த நிலையில் இறந்து கிடந்தார். ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்தவர். போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலரில் பட்டாசு வெடித்து பலி கொட்டாம்பட்டி: பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தீபக்குமார் 26, சந்தன்குமார் 25. திருவிழாவில் வானவேடிக்கை விடுவதற்காக சிங்கம்புணரியில் வெடி வாங்கிக்கொண்டு டூவீலரில் வந்தபோது வெடித்ததில் தீபக்குமார் இறந்தார். சந்தன்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
சமூகவலைதளத்தில் அவதுாறு: ஒருவர் கைது மதுரை: யா.ஒத்தக்கடையைச் சேர்ந்தவர் திருப்பதி 53. இவர் சமூக வலைதளத்தில் குறிப்பிட்ட மதத்தினர் குறித்து அவதுாறாக கருத்து வெளியிட்டிருந்தார். இதுகுறித்து மஸ்ஜிதுல் பிர்தோஷ் முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகக் குழு உறுப்பினர் சுதன் அலாவுதீன் அளித்த புகாரில் திருப்பதி கைது செய்யப்பட்டார். இவர் மீது ஏற்கனவே சில வழக்குகள் உள்ளன.
