ADDED : மார் 20, 2026 05:09 AM
பஸ்சை வழிமறித்து ரகளை: 2 பேர் கைது
மதுரை: திருமலை நாயக்கர் மகால் பஸ் ஸ்டாப் அருகே சென்ற பஸ்சை, பைக்கில் வந்த 3 இளைஞர்கள் வழிமறித்து பயணிகள், டிரைவருடன் திடீர் வாக்குவாதம் செய்து, ரகளையில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. தெற்குவாசல் போலீசார் வழக்குப் பதிந்து சுப்புராயர் அக்ரஹாரம் பகுதி குமார் 24, பெத்தானியாபுரம் அபிஷேக் 25, ஆகியோரை கைது செய்தனர். வீடியோவில் உள்ள மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மது விற்பனை : இருவர் கைது
மேலுார்: மேலவளவு போலீசார் கவட்டையம்பட்டி, வல்லாளப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். மதுவிற்ற செந்தில் மற்றும் பாண்டித்துரை ஆகிய இருவரை கைது செய்து 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் அழகர் கோவில் ரோட்டில் பறக்கும் படை அதிகாரி சதீஷ்குமார் வாகன சோதனையின் போது ஆட்டோவில் மது பாட்டில் கொண்டு சென்ற வினோபாகாலனி பாண்டி, எட்டி மங்கலம் ஊமையன் இருவரிடமிருந்து 44 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
