போலீஸ் செய்திகள்: 48 கிலோ போதைப் பொருட்கள்: 4 பேர் கைது
போலீஸ் செய்திகள்: 48 கிலோ போதைப் பொருட்கள்: 4 பேர் கைது
UPDATED : மே 11, 2026 10:21 PM
ADDED : மே 11, 2026 10:01 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: போலீசார் (மே 11) நிலையூர் சந்திப்பு ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஆட்டோ ஒன்றை சோதனையிட்டதில் சாக்கு மூடைக்குள் தடை செய்யப்பட்ட புகையிலை, கூல் லிப்ஸ் உள்பட பல்வேறு போதை பொருட்கள் 48 கிலோ இருந்தது தெரிந்தது. இதுதொடர்பாக கீரைத்துறை முக்குரான், மனைவி வள்ளியம்மாள், மருமகள் கேசம்மாள், ஆட்டோ டிரைவர் முருகன் ஆகியோரை கைது செய்தனர்.
* ஒருவர் கைது மேலுார்: மேலுார் பகுதியில் (மே 11) அதிகாலை 5:00 மணிக்கு எஸ்.ஐ., தினேஷ் ரோந்து சென்ற போது கிராவல் மண் ஏற்றி வந்த லாரியை சோதனையிட்டார். அனுமதியின்றி கொண்டு செல்வது தெரிய வரவே அ. வல்லாளப்பட்டி டிரைவர் விக்னேஷை 32, கைது செய்தார்.
