UPDATED : ஜூன் 14, 2026 10:39 PM
ADDED : ஜூன் 14, 2026 10:34 PM
* கொட்டாம்பட்டி : எஸ்.ஐ., கண்ணன் தலைமையில் போலீசார் கருங்காலக்குடி பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்றுக் கொண்டிருந்த உடப்பன்பட்டி அடைக்கண் 82, என்பவரை கைது செய்து 66 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
----
* வாலிபரை வெட்டியோர் கைது
சோழவந்தான்: இவ்வூரைச் சேர்ந்தவர் அஜய்குமார் 26, லோடுமேன். இவருக்கும் தென்கரையைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் சிறுவன் அவரது நண்பர்களுடன் சேர்ந்து மன்னாடிமங்கலம் இரட்டைவாய்க்கால் அருகே டூவீலரில் பெட்ரோல் தீர்ந்த நிலையில் நின்றிருந்த அஜய்குமாரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடினர். முள்ளிப்பள்ளம் சின்னப்பாண்டி மகன் தீபன் 19, கலைமணி மகன் வெற்றிவேல் 20, மற்றும் சிறுவனை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
----
* காரில் வந்து வழிப்பறி
வாடிப்பட்டி: பரவை நேதாஜி தெரு முத்துமாயாண்டி 60, தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேனாக வேலை பார்க்கிறார். நேற்று காலை டூவீலரில் அதலை ரோட்டில் உள்ள கட்டண கழிப்பறைக்கு சென்று திரும்பினார். அப்போது காரில் வந்த சிலர் டூவீலரை மறித்து முத்துமாயாண்டியை தாக்கி அவரிடமிருந்த ரூ.4,800 பறித்து காரில் தப்பினர். காயமடைந்த முத்து மாயாண்டி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். சமயநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
