தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ போலீஸ் செய்திகள்

 போலீஸ் செய்திகள்

 போலீஸ் செய்திகள்


ADDED : ஜூலை 04, 2026 06:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 04, 2026 06:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குட்கா விற்ற மூவர் கைது

மேலுார்: எஸ்.ஐ., ராஜேந்திரன் செக்கடி பகுதியில் ரோந்து சென்ற போது குட்கா விற்ற கீழபதினெட்டாங்குடி பிரகாஷ் 38, ராஜகம்பீரம் கருப்பு ராஜா 26, சுந்தரரராஜபுரம் யோக ராமமூர்த்தி 27, ஆகியோரை கைது செய்து எட்டரை கிலோ குட்கா, ரூ.4,830ஐ பறிமுதல் செய்தார்.

போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

திருமங்கலம்: கள்ளிக்குடி பகுதியில் ஜூன் 30ல் தி.மு.க., பிரமுகர் கலாநிதியை முன்விரோதம் காரணமாக சிலர் வெட்டிக் கொலை செய்தனர். இவ்வழக்கில் பிரகாஷ் கண்ணன், ராணுவ வீரர் முத்துக்கிருஷ்ணன், சிறைக்காவலர் மாரிச்செல்வம், மாரீஸ்வரன், மாயக்கண்ணன், அருண்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கொலை சம்பவத்திற்கு துணையாக இருந்தவர்கள் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கலாநிதியின் உறவினர்கள், கிராம மக்கள் கள்ளிக்குடி போலீஸ் ஸ்டேஷனை நேற்று முற்றுகையிட்டனர். போலீசார் சமரசம் செய்தனர்.

கிணற்றில் சிக்கியவர்கள் மீட்பு

சோழவந்தான்: -கண்ணனுார் அருகே கழுங்குப்பட்டியில் தனியாரின் 80 அடி ஆழ கிணற்றில் நாய் ஒன்று இறந்து கிடந்தது. அப்பகுதி விருமாண்டி 26, நாயை மேலே கொண்டு வரும் போது கால் இடறி கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. அவரை மீட்க மற்றொரு விருமாண்டி 48, நிவாஸ் 22, ஆகியோர் கிணற்றுக்குள் இறங்கினர். மூவரும் மேலே ஏற முடியாமல் தவித்தனர். தகவலறிந்த சோழவந்தான் தீயணைப்பு அலுவலர் முத்துக்குமரன் தலைமையிலான வீரர்கள் கயிற்று வலை மூலம் மீட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us