UPDATED : ஆக 29, 2026 11:17 PM
ADDED : ஆக 29, 2026 01:10 AM
மதுரை: செல்லுார் கோவிந்தராஜ். இவர் மீது எஸ்.எஸ்.காலனி ஸ்டேஷனில் திருட்டு, கொள்ளை வழக்குகள் 2009 முதல் உள்ளன. விசாரணைக்கு ஆஜராகாமல் உள்ள இவரை 'தேடப்படும் குற்றவாளி'யாக அறிவித்துள்ள மதுரை ஜே.எம். 5 வது நீதிமன்றம், அக்.14ல் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
இருவர் கைது
மேலுார்: மேலவளவு எஸ்.ஐ., முத்துக்குமரன், சிறப்பு சார்பு ஆய்வாளர் பாலமுருகன், அழகர் கோவில் ரோட்டில் ரோந்து சென்றனர். அவ்வழியே வந்த லாரியை சோதனையிட்டனர். அனுமதியின்றி கிராவல் மண் கொண்டு செல்வது தெரிந்ததால், அழகாபுரி சுரேஷ் 32, பஞ்சதாங்கிபட்டி தனபாண்டி 31, ஆகியோரை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.
நீரில் மூழ்கி குழந்தை பலி
மதுரை: மேலபனங்காடி பாண்டியராஜாவின் ஒரு வயது குழந்தை கிருத்திஷ்கா. வீட்டில் தண்ணீர் நிரம்பிய பிளாஸ்டிக் டப்பில் தவறி விழுந்து மூழ்கி இறந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலர் மோதி மூதாட்டி பலி
திருமங்கலம்: நாகலாபுரம் பாப்பு 68, வீட்டருகே நடந்து சென்றபோது டூவீலரில் சென்ற நாட்டாமங்கலம் சிவப்பாண்டி 33, மோதினார். மருத்துவமனை செல்லும் வழியில் பாப்பு இறந்தார்.
