ADDED : செப் 14, 2026 07:42 PM
* ஒருவர் பலி மூவர் காயம்
மேலுார் : மேலுார் அண்ணா காலனி அருண் குமார் 25, தனது நண்பர் தெற்கு தெரு மணி பாரதியுடன் 27, டூ வீலரில் மேலுார் நோக்கி சென்றார். மற்றொரு டூவீலரில் வண்ணாம்பாறை பட்டி எம்.பாலமுருகன் 41, கே.பாலமுருகன் 29, இருவரும் சென்றனர். கூத்தப்பன்பட்டி 4 வழிச் சாலையில் இரண்டு டூவீலர்களும் மோதியதில் அருண்குமார் இறந்தார். மற்றும் மூவரும் மேலுார், மதுரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். மேலுார் எஸ்.ஐ., அய்யாசாமி விசாரிக்கிறார்.
–––
* பஸ் மோதி ஒருவர் பலி வாடிப்பட்டி: ராமநாதபுரம் மாவட்டம் புதுார் பேட்டை இரட்டை ஊருணியைச் சேர்ந்தவர் ராஜகோபால் 44, ஆடு மேய்க்கும் தொழிலாளி. செப்.10 ல் வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டையில் உறவினரை பார்ப்பதற்காக திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். திண்டுக்கல்லில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ் மோதி துாக்கி வீசப்பட்டதில் படுகாயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
---
* கார் விபத்தில் மேலும் ஒருவர் பலி
வாடிப்பட்டி: மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் தண்டபாணி 63, இவர் உறவினர்களுடன் வெளியூர் சென்று விட்டு மதுரை திரும்பினார். தாதம்பட்டி ஜவுளிப் பூங்கா அருகே காரின் இடது பக்க டயர் வெடித்து நிலை தடுமாறி அருகே பெயர்ப்பலகை கம்பத்தில் மோதியது. இதில் இவரது தம்பி மகன் ஆனந்தகுமார் 30, சம்பவ இடத்திலும் அக்கா ராஜம்மாள் 63, வாடிப்பட்டி அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.
தம்பி செல்வராஜ் 60, அவரது மனைவி விஜயலட்சுமி 55, தண்டபாணி ஆகிய மூவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி தண்டபாணி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
---
* த.வெ.க.,வினர் புகார் திருமங்கலம்: சட்டசபைத் தொகுதி த.வெ.க., நிர்வாகிகள் ராஜபாண்டி, ஜெகன், திலீபன், கதிரவன் உள்ளிட்டோர் டி.எஸ்.பி.,யிடம் புகார் மனு அளித்தனர். அதில், செப்.,12 சென்னை சைதாபேட்டையில் நடந்த தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய், அமைச்சர் நிர்மல்குமார் குறித்து தி.மு.க., எம்.பி., ராஜா பேசியது அவதுாறாகவும், வன்முறையை துாண்டுவதாகவும் உள்ளது. அவரது பேச்சு த.வெ.க.,வினருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
