போலீசாரை மாற்ற வேண்டும்: த.வெ.க., நிர்மல்குமார் பேட்டி
போலீசாரை மாற்ற வேண்டும்: த.வெ.க., நிர்மல்குமார் பேட்டி
ADDED : ஏப் 04, 2026 06:15 PM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் த.வெ.க., வேட்பாளர் நிர்மல்குமார் கூறியதாவது: தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகளுக்கு ஓட்டளித்து மக்கள் அலுத்துப் போய்விட்டனர்.
இந்த தேர்தல் மாற்றத்திற்கான தேர்தலாக அமையும். திருப்பரங்குன்றத்தில் நிலவும் தற்போதைய அசாதாரண சூழ்நிலைக்கு தி.மு.க., - பா.ஜ.,தான் காரணம். தீபப் பிரச்சனையை அரசோ, அதிகாரிகளோ முடிவு செய்யக்கூடாது. மக்களே முடிவு செய்து கொள்ளட்டும். உளவுத்துறை ஐ.ஜி., செந்தில்வேல், சிறுபான்மையினரின் ஓட்டுகளை ஒருங்கிணைக்க திருப்பரங்குன்றம் பிரச்னையை திட்டமிட்டு பின்னால் இருந்து இயக்கியதாக பலர் குற்றம் சாட்டுகின்றனர்.
முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாமல் அதிகாரிகள் மட்டத்தில் இத்தேர்தல் கையாளப்படுகிறது. மதுரையில் அமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள போலீசாரை தேர்தல் கமிஷன் உடனடியாக மாற்ற வேண்டும் என்றார்.
