தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ போலீஸ் ஸ்டேஷனில் தீக்குளிப்பு பிரேத பரிசோதனைக்கு உத்தரவு

 போலீஸ் ஸ்டேஷனில் தீக்குளிப்பு பிரேத பரிசோதனைக்கு உத்தரவு

 போலீஸ் ஸ்டேஷனில் தீக்குளிப்பு பிரேத பரிசோதனைக்கு உத்தரவு


ADDED : ஏப் 03, 2026 06:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2026 06:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில் போலீஸ் ஸ்டேஷனில் தீக்குளித்து இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை புவனேஸ்வரி தாக்கல் செய்த மனு: என் கணவர் நாராயணன். எங்களுக்கு எதிராக சிவமார்க்கண்டன் என்பவர் கொடுத்த புகாரை சுப்பிரமணியபுரம் போலீசார் பெற்றுக்கொண்டனர். கணவர் கொடுத்த புகாரை பெற மறுத்தனர். முறையாக விசாரிக்காமல் கணவர், மகன்கள் மீது பொய் வழக்கு பதியப்போவதாக மிரட்டினர். மன உளைச்சலால் போலீஸ் ஸ்டேஷனில் கணவர் தீக்குளித்தார். மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தார். சி.பி.சி.ஐ.டி., அல்லது சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: முறையாக பிரேத பரிசோதனை, அதை வீடியோ பதிவு செய்தால் உடலை பெற்றுக் கொண்டு இறுதிச் சடங்கு செய்வதாக மனுதாரர் தரப்பு உறுதியளித்துள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக 2 டாக்டர்களை டீன் நியமிக்க வேண்டும். ​

இறந்தவரின் உடலில் பற்கள் ஏதேனும் விடுபட்டுள்ளனவா அல்லது வேறு காயங்கள் உள்ளனவா என்பதை கண்டறிய வேண்டும். பிரேத பரிசோதனையை விரைவில் முடித்து அதற்கான சான்றிதழை ஏப்., 15ல் இந்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வழக்கு மற்றும் எதிர்தரப்பு வழக்கு தொடர்பான ஆவணங்களை போலீஸ் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us