ADDED : மார் 04, 2024 05:42 AM
அ நிறம் | அளவு
வாடிப்பட்டி: சமயநல்லுார் அருகே தேனுாரில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது. மருத்துவ அலுவலர் வரலட்சுமி தலைமை வகித்தார்.
சுகாதார ஆய்வாளர் நாகேந்திரன் முன்னிலையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கிராம செவிலியர் விக்னேஸ்வரி, சுழியம் இளைஞர் நற்பணி மன்ற செயலாளர் கார்த்திகை குமரன், நிர்வாகிகள் பாண்டீஸ்வரி, காந்தி, செல்வம் பங்கேற்றனர்.
* திருப்பரங்குன்றத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை மண்டல தலைவர் சுவிதா துவக்கி வைத்தார். டாக்டர் பூபேஷ் குமார், செவிலியர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்றனர்.
