தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குன்றத்து கோயில் கதவுகளுக்கு பாலீஷ்

குன்றத்து கோயில் கதவுகளுக்கு பாலீஷ்

குன்றத்து கோயில் கதவுகளுக்கு பாலீஷ்


ADDED : அக் 28, 2024 05:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 28, 2024 05:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவ. 2ல் சஷ்டி திருவிழா துவங்குகிறது.

திருவிழா நடக்கும் 6 நாட்களும் கோயில் மண்டபங்களில் தங்கி பெண் பக்தர்கள் விரதம் மேற்கொள்வர்.

திருவிழா நாட்களில் தினம் இருவேளை யாகசாலை பூஜை, சண்முகார்ச்சனை, கோயிலுக்குள் சுவாமி புறப்பாடும் நடைபெறும். இதற்காக கோயில் பள்ளியறை, சண்முகர் சன்னதி, திருவாட்சி, கோவர்த்தனாம்பிகை அம்பாள் சன்னதி ஆகியவற்றில் உள்ள பித்தளைக் கதவுகள், வெள்ளி, பித்தளை பூஜை பொருள்கள், வெள்ளிப் பல்லக்கு ஆகியவற்றுக்கு பாலீஷ் போடும் பணி நடக்கிறது.

யாகசாலை நடைபெறும் விசாக கொரடு மண்டபத்தில் உள்ள மரத்தினாலான சிற்பங்கள், சுவாமி புறப்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கும் பாலீஷ் பணி நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us