தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ லோகநாதன் தான் வேண்டுமாம் தி.மு.க., கூட்டணியினர் 'அடம்'

 லோகநாதன் தான் வேண்டுமாம் தி.மு.க., கூட்டணியினர் 'அடம்'

 லோகநாதன் தான் வேண்டுமாம் தி.மு.க., கூட்டணியினர் 'அடம்'


ADDED : ஏப் 11, 2026 04:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2026 04:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை போலீஸ் கமிஷனராக அபிஷேக் தீட்சித் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் பிரவீன்குமாரிடம் தி.மு.க., தலைமையிலான கூட்டணி கட்சிகள் மனு அளித்தன.

அதில், தேர்தலை முன்னிட்டு, போலீஸ் கமிஷனராக இருந்த லோகநாதன் மாற்றப்பட்டு, அபிஷேக் தீட்சித் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மீது முன்பே பல்வேறு ஊழல், முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இத்தகைய சூழலில் தேர்தல் நேரத்தில் முக்கிய பொறுப்பில் அவரை நியமிப்பது சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடைமுறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்.

அனுபவம் வாய்ந்த லோகநாதனை மீண்டும் அதே பொறுப்பில் தொடர செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மனுவில், மதுரை வடக்கு தி.மு.க., வேட்பாளரும், நகர் செயலருமான தளபதி, மா.கம்யூ., செயலர் கணேசன், இ.கம்யூ., செயலர் சாமி, காங்., தலைவர் நல்லமணி உள்ளிட்டோர் கையெழுத்திட்டு உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us