ADDED : மார் 29, 2026 11:21 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றும் தலைமை அலுவலர், அலுவலர்கள் நிலை 1,2,3 ஆகியோருக்கு பயிற்சி முகாம் நடந்தது. டி.ஆர்.ஓ., சக்திவேல் தலைமை வகித்தார்.
தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகுரு, உதவி அலுவலர்கள் கிருஷ்ணகுமார், கவிதா, நேர்முக உதவியாளர் பார்த்திபன் முன்னிலையில் மண்டல தேர்தல் அலுவலர்கள் பயிற்சி அளித்தனர். 1514 அலுவலர்கள் பங்கேற்றனர். தேர்தல் நாளில் ஓட்டுச்சாவடி் பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
