ADDED : நவ 27, 2024 05:13 AM
அ நிறம் | அளவு
திருமங்கலம் : திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட் மற்றும் மதுரை ரோடு, உசிலம்பட்டி ரோடு பகுதிகளில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் தேவகிருபை, காருண்யராஜா, பிலோ இவாஞ்சலின், திருமங்கலம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் சோதனை நடத்தினர்.
இதில் அரசால் தடை செய்யப்பட்ட 65 கிலோ பாலிதீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சம்பந்தப்பட்டவர்களுக்கு மொத்தம் ரூ. 5 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டது.
