ADDED : ஜன 12, 2025 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை பாண்டியன்சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லுாரியில் தாளாளர் மலேசியா பாண்டியன் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
நிர்வாக இயக்குனர்கள் சரவணன், வரதராஜன் துவக்கி வைத்தனர். மாணவர்களின் கலைத்திறன் போட்டிகள், பாரம்பரிய விளையாட்டுகள் நடந்தன. முதல்வர் ரவீந்திரன், பேராசிரியர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.
ஆல்வின் பள்ளி
மதுரை கூடல்நகர் ஆல்வின் மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. உழவர்களின் பெருமிதத்தை போற்றும் வகையில் மண்பானையில் பொங்கல் வைத்து ஆசிரியர்கள் கொண்டாடினர்.

