/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் பொங்கல் விழா கொண்டாட்டம்
/
மதுரையில் பொங்கல் விழா கொண்டாட்டம்
ADDED : ஜன 14, 2025 11:13 PM
வாடிப்பட்டி; வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தலைமை டாக்டர் சாந்தி தலைமை வகித்தார். டாக்டர்கள் நிர்மலன், முத்துலட்சுமி, கவிதா முன்னிலை வகித்தனர். நர்ஸ் மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வி வரவேற்றார். அலுவலக மேற்பார்வையாளர் கிருஷ்ணன், மருந்தாளுநர் கண்ணப்பன், ரேடியோகிராபர் முத்துராஜ், ஆற்றுப்படுத்துனர் அன்னலட்சுமி, நர்சுகள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர். நர்ஸ் கவிதா நன்றி கூறினார்.
வாடிப்பட்டி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் பொங்கல் விழா, விளையாட்டு போட்டிகள் நடந்தன. செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். அரசு வழக்கறிஞர் ராமசாமி முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் சங்கத் தலைவர் அரிச்சந்திரன் வரவேற்றார். நீதிபதிகள் ராம் கிஷோர், செல்லையா விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு பரிசு வழங்கினர். சங்க நிர்வாகிகள், நீதிமன்ற பணியாளர்கள் பங்கேற்றனர். பொருளாளர் சிவராமன் நன்றி கூறினார்.
கருமாத்துார்
அருள் ஆனந்தர் கல்லுாரியில் ஆசிரியர் அல்லாத அலுவலக பணியாளர்கள் இணைந்து பொங்கல் விழா கொண்டாடினர். அலுவலக கண்காணிப்பாளர் கிரேஸி, அதிபர் ஜான் பிரகாசம், செயலாளர் அந்தோணிசாமி, முதல்வர் அன்பரசு மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர். அரைஸ் விரிவாக்கத்துறை சார்பில் 18 கிராமங்களில் ஆசிரியர்கள், மாணவர்கள், கிராம பொதுமக்களுடன் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாடினர்.
புனித கிளாரட் பள்ளி விழாவில் தாளாளர் சூசைமாணிக்கம், பொருளாளர் செல்வமணி, உதவித் தலைமை ஆசிரியர் அருள்ஜோசப், ஆசிரியர்கள் பாக்கியரசி, கவிதா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியை பாண்டிச்செல்வி நன்றி கூறினார்.
எழுமலை
மல்லப்புரம் திருவள்ளுவர் கல்வி நிறுவனங்களில் நடந்த பொங்கல் விழாவில் நிறுவனர் ராமகிருஷ்ணன், நிர்வாகிகள் காமராஜ், சுப்பிரமணி, பெருமாள், சென்னகிருஷ்ணன், லோகநாதன், செல்வராஜ், நிர்வாக அலுவலர் சந்திரன், கல்வியியல் கல்லுாரி முதல்வர் கருப்பசாமி, கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் செல்வக்குமாரி, பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் சுபாராஜன், மெட்ரிக் பள்ளி முதல்வர் தனபாக்கியம் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர். மாணவியர்கள் பங்கேற்ற நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடந்தன.