ADDED : ஜன 14, 2026 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: திருமங்கலம் உழவர் சந்தையில் காய்கறி வாங்கும் நுகர்வோருக்கு இலவச பரிசு வழங்கப்படுவதாக வேளாண் வணிக துணை இயக்குநர் மெர்ஸி ஜெயராணி தெரிவித்தார்.
நுகர்வோர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் ரூ.200க்கு மேல் காய்கறி வாங்குவோருக்கு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பெரிய வெங்காயம் அல்லது ஒரு காலிபிளவர் இலவசமாக வழங்கப்படும். வீட்டு விசேஷங்களுக்கு ஆர்டர் செய்தால் குறைந்த விலையில் மொத்த காய்கறி, பழங்கள், பூக்கள் 'டோர் டெலிவரி' செய்யப்படும் என்றார். தொடர்புக்கு : 87782 45189.

