/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தி.மு.க., நிர்வாகி வீட்டில் பொங்கல் பரிசு 'டோக்கன்'
/
தி.மு.க., நிர்வாகி வீட்டில் பொங்கல் பரிசு 'டோக்கன்'
தி.மு.க., நிர்வாகி வீட்டில் பொங்கல் பரிசு 'டோக்கன்'
தி.மு.க., நிர்வாகி வீட்டில் பொங்கல் பரிசு 'டோக்கன்'
ADDED : ஜன 06, 2026 06:23 AM

சோழவந்தான்: சோழவந்தான் 10வது வார்டில் தி.மு.க., வார்டு செயலாளர் வீட்டில் பொங்கல் பரிசுத்தொகைக்கான டோக்கன்களை விநியோகம் செய்ததால் அ.தி.மு.க., நிர்வாகிகள் வாக்குவாதம் செய்தனர்.
இந்த வார்டில் வேளார், முகமதியர், நாடார் புதுத்தெருக்கள் உள்ளன. அரசின் பொங்கல் பரிசுக்கான டோக்கன்களை வீடு தோறும் சென்று வழங்க வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால் முகமதியர் தெருவில் தி.மு.க., நிர்வாகி வீட்டில் வைத்து எம்.யு.,5 ரேஷன் கடை ஊழியர்கள் பொதுமக்களுக்கு டோக்கனை விநியோகம் செய்துள்ளனர்.
அ.தி.மு.க., நிர்வாகி மணிகண்டன் கூறியதாவது:
இங்கு 10வது வார்டில் 3 தெருக்கள் உள்ளன. தி.மு.க., வார்டு செயலாளர் அப்பாஸ், எம்.யு.5 ஊழியர்கள் சிலர் முகமதியர் தெருவில் அப்பாஸின் வீட்டில் வைத்து பொங்கல் பரிசு டோக்கன்களை விநியோகம் செய்தனர்.
இது குறித்து கேட்டபோது, 'ஊழியருக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் இங்கு வைத்து வினியோகிக்கிறோம் என்றனர். உடல்நிலை சரியில்லை என்றால் வேறு இடத்தில் அமர்ந்து வழங்கலாமே இங்கு ஏன் அமர்ந்துள்ளீர்கள் எனக் கேட்டதற்கு அப்படித்தான் செய்ய முடியும்; உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள் என்று பேசுகின்றனர்.'
இதை பார்க்கும்போது தமிழக அரசு வழங்கும் பரிசை போல் அல்லாமல், தேர்தலுக்காக தி.மு.க.,வினர் வழங்கும் லஞ்சம் போன்று உள்ளது என்றார்.

