தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அபாய தொட்டியில் தபால் நிலையம்

அபாய தொட்டியில் தபால் நிலையம்

அபாய தொட்டியில் தபால் நிலையம்


ADDED : செப் 17, 2026 05:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 17, 2026 05:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சோழவந்தான்: மேலக்காலில் காலாவதியான தொட்டியில் தபால் நிலையம் செயல்படும் அவலநிலை உள்ளது.

நாகமலை காலனி அருகே புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி கட்டடத்தில் தபால் நிலையம் செயல்பட்டு வந்தது. சில மாதங்களுக்கு முன் ஊராட்சி அலுவலகம் அங்கு மாற்றப்பட்டதால் தபால் நிலையத்திற்கு வேறு இடம் கிடைக்கவில்லை. இதனால் அம்பேத்கர் காலனி அருகே பல ஆண்டுகளுக்கு முன் உடைகற்களால் கட்டிய பழைய மேல்நிலை குடிநீர் தொட்டியின் கீழே உள்ள அறைக்கு மாற்றப்பட்டு செயல்படுகிறது.

ஏற்கனவே சேதமடைந்த நிலையில் தொட்டியை  அகற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆபத்தை உணராமல் தபால் நிலையமாக செயல்படுகிறது. தபால் நிலைய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us