ADDED : ஏப் 13, 2026 02:52 AM
மதுரை: சட்டசபை தேர்தலில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, அவர்களின் விருப்பத்தின்பேரில் வீடுகளுக்கே சென்று இன்று (ஏப்.13)முதல் ஓட்டு சேகரிக்க தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது.
மாவட்டத்தின் 10 தொகுதிகளில் மொத்தம் 2405 மூத்த குடிமக்கள், 1219 மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டளிக்க விண்ணப்பித்துள்ளனர். அவர்களிடம் ஓட்டுகளை சேகரிக்க ஓட்டுப்பதிவு அலுவலர் தலைமையின் கீழ், நுண்பார்வையாளர்கள் அடங்கிய 95 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று முதல் வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர்.
மாவட்ட தேர்தல் அலுவலர் பிரவின் குமார் கூறுகையில், ''இவ் வசதியை பயன்படுத்தி ஏற்கனவே விண்ணப்பித்த மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஓட்டுச் சாவடிக்கு நேரில் சென்று ஓட்டளிக்க இயலாது. வீட்டில் இருந்தே ஓட்டுகளை பதிவு செய்ய வேண்டும்'' என்றார்.
