ADDED : மே 30, 2026 04:30 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை வடக்கு வெளி வீதி தலைமை தபால் அலுவலகத்தில் அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம், தேசிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் தலைவர்கள் சாந்தி, உமா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
'தற்காலிக இணைப்பு' எனும் பேரில் துணை தபால் அலுவலகங்களை மூட வழிவகுக்கும் முன்மொழிவை நிறுத்த வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்ப மதுரையில் புதிய தபால் அலுவலகங்களை திறக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.
கோட்ட சங்கச் செயலாளர்கள் நாராயணன், அசோக் குமார், முருகன், வெங்கடேசன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
