ADDED : அக் 05, 2025 03:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : திருமங்கலம் நகராட்சி பஸ் ஸ்டாண்ட் சீரமைக்கும் பணிகள் ரூ.
2.70 கோடி மதிப்பீட்டில் கடந்த மே மாதம் தொடங்கப்பட்டு வேலைகள் நடந்தன. செப்., 25ல் திறக்கப்பட்டது. ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் பஸ் ஸ்டாண்டின் நுழைவு பகுதி மற்றும் பஸ் வெளியேறும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் தளத்தில் பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. தளம் முழுவதும் சேதமடைய வாய்ப்புள்ளது. பள்ளத்தை உடனடியாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.