ADDED : ஜன 23, 2026 06:20 AM

சோழவந்தான்: சோழவந்தானில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளுக்காக தோண்டிய ரோடால் மக்கள் படாதபாடு படுகின்றனர்.
அப்பகுதி மணி கூறியதாவது:
இங்கு கோவிந்தம்மாள் தெரு, அக்ரஹாரம் இணைப்பு குறுக்குத் தெருவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகே குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி களுக்காக 'பேவர் ப்ளாக்' கற்களை அகற்றி பள்ளம் தோண்டினர். குழாய் பதித்த பின்பு முறையாக ரோட்டை சீரமைக்கவில்லை. இதனால் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது.
ஏற்கனவே தெரு குறு கலாக உள்ளது. தற்போது ஒருபுறம் பள்ளம் தோண்டியும், மறுபுறம் பதிப்பதற்காக குழாய்களை வைத்திருப்பதாலும் ரோடு மேலும் குறுகி விட்டது.
பள்ளி, மருத்துவ மனைக்கு இவ்வழியை மக்கள் பயன்படுத்துகின்றனர். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.
இரவில் போதுமான விளக்குகள் இல்லாததால் டூவீலரில் செல்வோரும் விழுந்து காயமடைகின்றனர். பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அதிகாரிகளிடம் கேட்டபோது, 'விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

