/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பொங்கல் விற்பனைக்கு பானைகள் தயார்
/
பொங்கல் விற்பனைக்கு பானைகள் தயார்
ADDED : டிச 23, 2025 07:10 AM

மேலுார்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுந்தரராஜன்பட்டியில் பொங்கல் பானை விற்பனை களை கட்ட துவங்கி உள்ளது.
கிடாரிப்பட்டி அருகே சுந்தரராஜன்பட்டி நல்லையன் 54. இவர் 35 ஆண்டுகளாக பொங்கல் பானை தயாரிக்கிறார். இப்பானைகளில் தயாராகும் உணவுக்கு சுவை அதிகம் என்பதால் காரைக்குடி, தேவகோட்டை, மதுரை, சிங்கம்புணரி பகுதி வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.
நல்லையன் கூறியதாவது: அழகர்கோவில் மலையில் இருந்து வரும் மூலிகை தண்ணீர் தேங்கும் தேர்குன்றம், பொட்ட முத்தன், பல பட்டறை கண்மாயில் இருந்து மணலை சேகரித்து பானைகளை தயார் செய்கிறேன். மக்களின் தேவைக்கேற்ப கால் படி முதல் ஒரு படி வரை பொங்கல் பானைகளும், அனைத்து வகையான பொருட்களும் தயாரிக்கிறேன். இப்பானைகளை ரூ. 60 முதல் ரூ.140 வரை விற்கிறேன் என்றார்.

