/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மின்சாரம் துண்டிப்பு விவசாயிகள் பாதிப்பு
/
மின்சாரம் துண்டிப்பு விவசாயிகள் பாதிப்பு
ADDED : பிப் 14, 2025 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம்: மதுரை பரம்புப்பட்டியில் விமான நிலைய விரிவாக்க பகுதிகள் தவிர எஞ்சிய நிலங்களில் அப்பகுதி விவசாயிகள் கத்தரி, வெண்டை, பூசணி, பீர்க்கு, வாழை, மல்லிகை பயிரிட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் விவசாயத்திற்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
விவசாயிகள் கூறுகையில், ''கலெக்டர், திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகம், அனுப்பானடி மின்வாரிய அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம். நடவடிக்கை இல்லை. பயிர்கள் கருகி வாழ்வாதாரம் முடங்கி விட்டது. மீண்டும் மின் இணைப்பு வழங்க வேண்டும்'' என்றனர்.

