ADDED : நவ 14, 2024 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை; மதுரை பெசன்ட் ரோடு, காஞ்சி காமகோடி மடத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு சந்திரமவுலீஸ்வருக்கு ராதாகிருஷ்ணன் பூஜை, அலங்காரம், அர்ச்சனை செய்தார். ஏற்பாடுகளை மடத்தின் தலைவர் டாக்டர் ராமசுப்பிரமணியன், செயலாளர் எல். வெங்கடேசன், பொருளாளர் வெங்கட்ரமணி, நிர்வாகிகள் செய்திருந்தனர்.
நரிமேடு காட்டு பிள்ளையார் கோயிலில் பிரதோஷ பூஜையை அர்ச்சகர் கோபி, கிருஷ்ணா ராஜன் நடராஜன் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் தலைவர் சுரேஷ் பாபு, கண்காணிப்பாளர் சந்திரசேகரன், வெங்கடேசன் செய்திருந்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது.