ADDED : டிச 22, 2025 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மக்கள் தொடர்பு அதிகாரிகள் கூட்டமைப்பின் சார்பில் நடந்த விழாவில் தலைவர் முரளி தலைமை வகித்தார்.
செயலாளர் ராமநாதன் வரவேற்றார். 2026ம் ஆண்டுக்கான காலண்டரை டி.ஆர்.ஓ., அன்பழகன், நகர் போலீஸ் உதவி கமிஷனர் சிவசக்தி வெளியிட, தொழிலதிபர் முஸ்தபா பெற்றார். சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.17.5 லட்சம் பணம், மருத்துவமனை வார்டில் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள நகை, குப்பையில் கிடந்த ரூ.25 லட்சம் மதிப்பு தங்கநகையை போலீசாரிடம் ஒப்படைத்த மனிதநேய பெண்கள் முறையே செல்வமாலினி, கிருஷ்ணவேணி, மீனாட்சியை பாராட்டினர். இணைச் செயலாளர் கோகுலநம்பி நன்றி கூறினார். பொருளாளர் சரவணநாதன், துணைத் தலைவர் சந்தான கிருஷ்ணன், நடேசமூர்த்தி, சக்தி ஒருங்கிணைத்தனர்.

