ADDED : மார் 22, 2025 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் சேதுபதி பள்ளி அருகே உள்ள சிக்னலில் போக்குவரத்து போலீசார்வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
நம்பர் பிளேட் இன்றி டூவீலரில் சென்ற கீழமுத்துப்பட்டியைச் சேர்ந்த ஹரிபிரகாஷிடம்20, மேற்கொண்ட விசாரணையில், மாட்டுத்தாவணி சீமான்நகரில் அதனை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.
ஏற்கனவே டூவீலர் காணாமல் போனதாக வழக்கு பதிவாகி இருந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதில் துரிதமாக செயல்பட்டஎஸ்.ஐ., லிங்ஸ்டன், ஏட்டு விஜயன், போலீஸ்காரர் முகம்மது ரபீக்கை கமிஷனர் லோகநாதன்பாராட்டிசான்றிதழ் வழங்கினார்.