தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கடவுளை போற்று; மனிதனை நினை சாந்திகுமார சுவாமிகள் அறிவுரை

கடவுளை போற்று; மனிதனை நினை சாந்திகுமார சுவாமிகள் அறிவுரை

கடவுளை போற்று; மனிதனை நினை சாந்திகுமார சுவாமிகள் அறிவுரை


ADDED : ஏப் 01, 2025 04:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2025 04:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: 'கடவுளை போற்று, மனிதனை நினை என்ற குன்றக்குடி அடிகளார் வழியை பின்பற்றுவோம்' என பெங்களூரு துவாரகாபீடம் சாந்திகுமார சுவாமிகள் பேசினார்.மதுரை காந்தி மியூசியத்தில் சண்சரண் சமூக கல்விநல அறக்கட்டளை, மதுரை இலக்கியப் பேரவை சார்பில் நுால் வெளியீடு, குன்றக்குடி அடிகளார் நுாற்றாண்டு விழா, விருது வழங்கும் விழா தேவகி மருத்துவ குழு இயக்குனர் நாகேந்திரன் தலைமையில் நடந்தது.

பேரவை செயலாளர் போத்திராஜன் வரவேற்றார். சண்முகத்திருக்குமரன் எழுதிய சித்திரையின் முத்திரை, அபரஞ்சி அழகர், திருமந்திர முத்துகள், பேச்சுக்கலை, சின்னசின்ன மின்மினிகள் புத்தகங்களை ராஜ்மஹால் முருகானந்தம், பேராசிரியர் லட்சுமணராஜ், செந்துார் பார்மா இயக்குனர் செந்தில்நாதன், வழக்கறிஞர் சாமிதுரை, மனிதநேய நுகர்வோர் பாதுகாப்பு நிறுவன இயக்குனர் அசோகன் வெளியிட்டனர்.

இதில் பெங்களூரு துவாரகாபீடம் சாந்திகுமார சுவாமிகள் பேசியதாவது: இன்பம், துன்பம் என்ற நடுநிலையே இந்து சமய கோட்பாடு. 1800ல் வாழ்ந்த காரல் மார்க்ஸ் தத்துவத்தை 7 ம் நுாற்றாண்டிலேயே திருநாவுக்கரசர் கூறிவிட்டார். இளமையிலே ஆன்மிகத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர் அடிகளார். அவரது கொள்கையான 'கடவுளை போற்று, மனிதனை நினை'என்ற கூற்றை பின்பற்றுவோம். என்றார். பல்வேறு துறை சார்ந்த 48 மகளிருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் வைஜெயந்தி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us