ADDED : ஜன 26, 2026 05:16 AM
மதுரை: மதுரையில் பிரமலைக் கள்ளர் முன்னேற்ற நலச்சங்கம், பிரசிடென்ஸி சர்வீஸ் கிளப் சார்பில் பொங்கலையொட்டி, குழந்தைகள், பெண்கள், ஆண்களுக்கென தனிப்போட்டிகள் நடத்தப்படும். இந்தாண்டு நடந்த போட்டியைத் தொடர்ந்து வெற்றி பெற்றோருக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.
மேலும் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றோருக்கு ஊக்கத் தொகை வழங்குதல், மத்திய, மாநில அரசு போட்டித் தேர்வில் வென்று உயர்பொறுப்புகளில் உள்ளோரை பாராட்டுதல், தனித்திறன் வெளிப்படுத்துதல் என நிகழ்ச்சிகள் நடந்தன.
ஆகாஷ் கிளப்பில் நடந்த இந்நிகழ்ச்சியில் தலைவர் கல்லாணை தலைமை வகித்தார். செயலாளர் அன்பில்தர்மலிங்கம் முன்னிலை வகித்தார்.
பொருளாளர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர்கள் ராமச்சந்திரன், உக்கிரபாண்டி, விஜய்பிரபாகர், பாலமுருகன், ஜெயராஜ், ஓய்வு நீதிபதி மாயாண்டி உட்பட பலர் பங்கேற்றனர்.
