/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற பிரார்த்தனை
/
தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற பிரார்த்தனை
ADDED : நவ 25, 2025 04:59 AM
திருப்பரங்குன்றம்: ஹிந்து ராஷ்டிர சபா, ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதனால் ஆலய பாதுகாப்பு இயக்க மாநில அமைப்பாளர் சுடலையானந்தா சுவாமி, நகர் துணைத் தலைவர் பாக்கியநாதன், பொதுச்செயலாளர் ஆனந்த், செயலாளர் ராஜபாண்டி, தலைவர் முருகன், ஹிந்து ராஷ்டிர சபா மாநில தலைவர் கிருஷ்ணகுமார், துணைத்தலைவர் அருண்பாண்டியன், நகர் பொதுச் செயலாளர் ராஜ்குமார், விஜயநகர பேரரசு அறக்கட்டளை நிர்வாகி செந்தில்குமார் ஆகியோர் நேற்று சுப்பிரமணிய சுவாமி கோயில் வாசல் முன்பு தேங்காய் உடைத்து பிரார்த்தனை செய்தனர்.

