/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பிரதமர் பிறந்தநாள் விளையாட்டு போட்டி
/
பிரதமர் பிறந்தநாள் விளையாட்டு போட்டி
ADDED : செப் 28, 2024 04:24 AM
மதுரை : பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி நகர் பா.ஜ., சார்பில் முதற்கட்டமாக விளையாட்டு போட்டிகள் செப். 27 முதல் 29 வரை நடக்கின்றன.
துவக்க நாளான நேற்று பா.ஜ., மற்றும் நேதாஜி புரட்சிப் படை சார்பில், மதுரை மீனாம்பாள்புரம் ஆபீசர்ஸ் டவுன் பகுதியில் கபடிப் போட்டி நடந்தது. நகர் துணைத் தலைவர் ராஜ்குமார், மண்டல் தலைவர் பிச்சைவேல், பொதுச் செயலாளர் ஸ்ரீராம், தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் பாலமுருகன், ஒருங்கிணைப்பாளர்கள் பிரபு, அருண்பிரசாத் பங்கேற்றனர். இரண்டாம் நாளான இன்று ஆண்டார் கொட்டாரத்தில் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. நாளை எஸ்.எஸ்.காலனி தாம்ப்ராஸ் திருமண மஹாலில் கராத்தே, கத்தா போட்டிகள் நடக்கின்றன.
அக்.5, 6 ல் கோச்சடையில் கைப்பந்து போட்டி, அக்.12 ல் மதுரை தானப்பமுதலி தெரு எல்லீஸ் டி.டி.சி.ஏ., எஸ்.எம்.எஸ்., மஹாலில் பள்ளிகளுக்கு இடையேயான டென்னிஸ், செப்.13ல் விராட்டிப்பத்தில் இறகுபந்தாட்ட போட்டியும் நடக்க உள்ளன. பங்கேற்க விரும்புவோர் 81100 14190 ல் தொடர்பு கொள்ளலாம்.