sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழு அதிகாரிகள் ஆய்வு

/

 திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழு அதிகாரிகள் ஆய்வு

 திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழு அதிகாரிகள் ஆய்வு

 திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழு அதிகாரிகள் ஆய்வு

1


ADDED : பிப் 26, 2026 06:19 AM

Google News

ADDED : பிப் 26, 2026 06:19 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரதமர் மோடி மார்ச் 1 அன்று மாலை 4:00 மணியளவில் சுவாமி தரிசனம் செய்ய வருகிறார். அதற்காக பிரதமரின் பாதுகாப்பு சிறப்பு அதிகாரிகள் நேற்று கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர்.

மதுரை மண்டேலா நகரில் மார்ச் 1ல் தே.ஜ., கூட்டணி கட்சிகளின் சார்பில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் பிரதமர் மோடி, மாலையில் திருப்பரங்குன்றம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகிறார். அதற்காக பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் நேற்று மதியம் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வந்தனர் .

அவர்கள் கோயில் மூலஸ்தானம் வரை சென்று, பிரதமர் கோயிலுக்குள் நுழையும் பாதை, சுவாமி தரிசனம் முடித்து வெளியேறும் பாதை கோயிலுக்குள் செல்லும் பாதை படிக்கட்டுகள் ஆகியவற்றை 20 நிமிடங்களுக்கு மேல் ஆய்வு செய்தனர். போலீஸ் கமிஷனர் லோகநாதன், கோயில் துணை கமிஷனர் ஞானசேகரன், கண்காணிப்பாளர்கள் ரஞ்சனி, சுமதி, சத்யசீலன், பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன், மாநில செயலாளர் கதலி நரசிங்கபெருமாள் உடன் சென்றனர்.

பொதுக்கூட்ட மேடையிலும் ஆய்வு: மண்டேலா நகர் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டு வரும் மேடை, மற்ற பணிகளை பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினர், தேசிய பாதுகாப்பு படையினர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் தமிழக வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us